மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ”வணக்கம் சென்னை” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி.

 

இதனை அடுத்து விஜய் ஆண்டனியை நடிப்பில் “காளி” படத்தை எடுத்த கிருத்திகா தொடர்ந்து “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கவுள்ள கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என்று பெயர் வைத்துள்ளார்.

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமைக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.