இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடத்தக்கூடாது என்று பேசினார். மேலும் அவர், “ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும்’” என்றார்.
இசதற்கு அதே மேடையில் ஆர்.ஜே.பாலாஜி, பதிலடி கொடுத்தார். அவர், ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கேரள கோவில்களில் யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மகிழ்ச்சியுடன்தான் நிற்கின்றனவா?. குஜராத்தில் ஓட்டகங்கள் ஆயிரக்கணக்கான கிலோ பொதிகளை சுமந்து செல்கின்றன.
இவற்றையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே நேரம், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல… தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அருகில் உள்ள மாநிலத்துக்கு கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு அந்த மாநிலம் தண்ணீர் வழங்கவில்லை. அதை யாராவது கேட்டீர்களா?’ என்று பதிலடி கொடுத்தார் பாலாஜி.
அந்த வீடியோ