சென்னை:

2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இதுவரை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இன்றே தாக்கல் செய்யுங்கள்… ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தாமதமாக தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஆண்டுக்கு நிகர வருவாய் 2,50,000 (இரண்டு லட்சத்துக்கு 50ஆயிரம்)  ரூபாய்க்கு அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான அவகாசம் முதலாவத தடவையாக ஜூன் 30 வரை வழங்கப்பட்டது, பின்னர் ஜூலை 10வரை 2வது முறையாக அவகாசம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 3வது முறையாக ஆகஸ்டு 31ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.  அதன்படி இன்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய இன்றுடன் கெடு முடிவடைகிறது.

இன்றுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லையெனில், ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 1000 ரூபாய் அபராதமும், அதற்கு மேல் ஈட்டுவோர் 5000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு சிறை தண்டனையும் உண்டு என்று மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

இதுவரை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இன்றே மறக்காமல் தாக்கல் செய்யுங்கள்.