வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுதும் 150 கோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த செயலி தனிநபர்களுடன் பேசும் செய்திகள் முழுமையாக மறைகுறியாக்கம்(end-to-end encryption) செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது என்றெல்லாம் பாதுகாப்பு பற்றி பேசினாலும் இஸ்ரேலிய தொழில்நுட்ப ஊடுவியலாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பின்பக்க வழியைப் பயன்படுத்தி தகவல்களை  திரட்டுவதாக அறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் உடனடியாக அதன் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

எனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக கூகிள் பிளேஸ் ஸ்டோருக்கு சென்று உடனடியாக வாட்ஸ்அப் செயலியை மேம்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் ன் பாதுகாப்பு குறைபாட்டை வைத்து ஒரு உளவு நிரல் (ஸ்பைவேர்) ஒன்றினை நிறுவி அதிலிருந்து பிற செல்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளதை கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்த பாதுகாப்பு பணியை செயல்படுத்தியுள்ளது

கள்ளன் பெரிசா ? காப்பான் பெரிசா என்ற போட்டி தொழில்நுட்ப உலகத்திலும் வந்துவிட்டது

-செல்வமுரளி

பின்குறிப்பு:

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை குறையை தெரியப்படுத்துவது பத்திரிக்கை.காம் இன்  நோக்கமல்ல, வாட்ஸ்அப் செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை நிறுவி பயனாளர்களை பிரச்னையில் இருந்து மீட்பது மட்டுமே எங்கள் நோக்கம்