ண்டன்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் இந்திய பெண் குழு உறுப்பினராக ஜி எஸ் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை நியமித்து வருகிறது. சமீபத்தில் சர்வ தேச ஆண்கள் ஒருநாள் போட்டிக்கான நடுவராக கிளேர் போலோசாக் என்பவரை நியமித்தது. தற்போது அவருடன் மற்றொரு ஆஸ்திரேலியாவின் எலாய்ஸ் ஷெர்ல்ட்ன் உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஜி எஸ் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கமிட்டி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான நடுவரகளை தேர்ந்தெடுக்க உள்ளார். ஜி எஸ் லட்சுமி கடந்த 2008-09 ஆம் வ்ருடம் இந்திய பெண்கள் கிரிக்கெட் குழுவின் நடுவராக பணி புரிந்துள்ளார்.

இந்தக் குழுவில் இவரைத் தவிர லாரென் ஏஜன்பெர்க், கிம் காட்டன், ஷிவானி மிஸ்ரா, சூ ரெட்ஃபெர்ன், மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் உள்ளிட்ட பெண்கள் உள்ளனர். இவருடைய தேர்வை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மூத்த மேலாளர் ஆடீரியன் கிரிஃபெத் வரவேற்றுள்ளார்.

இது குறித்து லட்சுமி, “என்னை சர்வதேச குழுவில் இணைத்தது மிகவும் பெருமையை அளித்துள்ளது. இதன் மூலம் எனக்கு புதிய பாதை கிடைத்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் வீராங்கனையாகவும் போட்டி நடுவராகவும் நான் பணியாற்றி உள்ளேன். எனவே எனது அனுபவம் எனக்கு இந்த பணியை நன்கு புரிய கைகொடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.