சென்னை:
படிப்பாளிகள் மிகுந்த சென்னையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“இறந்தவர் உடலில் இருந்து கொரோனா தொற்று பரவாது” என்று மருத்துவ உலகம் அறிவித்திருந்தாலும், கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட நமது மக்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் சென்னையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மருத்துவர் ஒருவர் கொரோனாவால் இறந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதுபோல, நேற்று மரணம் அடைந்த பிரபல நரம்பியர் நிபுணர் உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக இடைவெளியுடன் ஒன்றுகூடி, கீழ்பாக்கம் பகுதிமக்கள் எதிர்ப்பு. எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்தவற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில், போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து கலைந்துச்செல்ல அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.