சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தால், வெளியூர் செல்லும்  பயணிகள் கடும் அவதிப்பட்ட நிலையில், தற்போது அங்குள்ள பேருந்து நிலைய நடைமேடையில் (பிளாட்பாம்) எந்தெந்த பேருந்துகள், எந்தெந்த நடைமேடையில் இருந்து புறப்படும் என்ற விவகாரங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத் தில்  இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல்இ தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் பேருந்துகள் புறப்படாது என்றும், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படு கின்றன. அதேபோல செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்,  போதிய கழிப்பிடமோ, உணவகம் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல்,  அவசர அவசரமாக திடீரென பேருந்து நிலையத்தை திறந்து மக்களை  திமுக அரசு அலைக்கழித் தது.  மேலும், சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த பேருந்து முனையத்திற்கு செல்லவே இரண்டு முதல் 3மணி நேரம் ஆவதுடன், பொதுமக்களின் பணமும் வீணாகிறது. மேலும், அவசரத்துக்கு ஆட்டோ, கால் டாக்சி பிடித்தால், அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகிறது. மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து அங்கு செல்ல முறையான சென்னையில் பல பகுதிகளில் இருந்து முறையான பேருந்து வசதிகள் செய்யப்படாததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றால், எந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கிறது என்ற விவரமும் தெரியாமல் மக்கள் லக்கேஜ்கள் மற்றும் குழந்தை குட்டிகளை தூக்கிக்கொண்டு கொண்டு அலைந்து திரிந்தனர்.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  மேலும், அவசரம் அவசரமாக பேருந்து நிலையத்தை திறந்த திமுக அரசின் இந்த நடவடிக்கை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மக்களின் திமுக அரசு மீதான விமர்சனம் இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு தற்போது,   சிறிய மாற்றத்தை செய்து திருச்சி, சேலம் உள்பட சில மாவட்ட பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் எந்தெந்த ஊர்களுக்கான பேருந்துகள் எந்தெந்த நடைமேடையில் இருந்து புறப்படும் என்பதை  பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடைமேடை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் பேருந்துகள் புறப்படாது என்றும், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படு கின்றன. அதேபோல செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் இரவு 10 வரை அதிக பேருந்தும், 10 மணிக்கு மேல் பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்து இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நடைமேடை எண் அறிவிப்பு

நடைமேடை எண் 1  மற்றும் 2 :   கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை, திருச்செந்தூர், செங்கோட்டை, சிவகாசி பேருந்துகள்  நிறுத்தம்.

நடைமேடை எண் 3: மதுரை, ராமேஸ்வரம் பேருந்துகள்

நடைமேடை எண் 4: கரூர், திருச்சி, திண்டுக்கல், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி 

நடைமேடை எண் 5: அரியலூர், திருவாரூர், வேளாங்கண்ணி, இயக்கப்படும் பேருந்துகள்

நடைமேடை எண் 6:கோவை, சேலம்,  பொள்ளாச்சி,  திருப்பூர், கரூர் பேருந்துகளும் நிறுத்தப்படும்.

நடைமேடை எண் 7: திருவண்ணாமலை, 

நடைமேடை எண் 8: கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், 

நடைமேடை எண் 9: கடலூர், சிதம்பரம், புதுச்சேரி பேருந்துகள் 

இவ்வாறு மொத்தம் 154 நகரங்களுக்கான  பேருந்துகள் புறப்படும் நடை மேடை விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. முழுமையான விவரங்கள் பெற கீழே உள்ள பட்டியலை பார்க்கவும்.