சென்னை: சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து வந்தது (கிட்னி திருட்டு) உறுதியான நிலையில், பெரம்பலூரில் உள்ள திமுகவினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சித்தார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமங்களை மட்டும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
கிட்னி திருட்டில் ஈடுபட்ட இந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கிட்னி திருட்டில் ஈடுபட்ட மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் இடைத்தர கராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை ஏன் இன்று வரை கைது செய்யவில்லை. மேலும், கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரிடம் விசாரணைகூட நடத்ததா நிலையில், மற்றொரு மருத்துவமனையான, அமைச்சர் நேருவின் உறவினருக்க சொந்தமான திருச்சி செதார் மருத்துவமனை மீதும், மருத்துவர்கள்மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இரு மருத்துவமனைகளிலும், சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், அதனால், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, திருச்சி செத்தார் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சித்தார் மருத்துவமனை ஆகியவற்றின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்களை ரத்து செய்யுமாறு மாநில அரசு மருத்துவ மற்றும் ஊரகச் சுகாதார சேவைகள் இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டள்ளது.
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசு ஒப்புதல் பெற்ற இந்த மருத்துவமனைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்ய இனி அனுமதிக்கப்படாது. உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் ஆகிய 2 இடைத்தரகர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்படும்.
தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குநர் டாக்டர் வினீத் தலைமையிலான குழு, இந்த மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தியதை உறுதி செய்தது. குறிப்பாக, நோயாளிகளுடன் ரத்த உறவு இல்லாதவர்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்று, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ஐ மீறியுள்ளன.
விசாரணைக் குழு, மருத்துவமனைகள் சமர்ப்பித்த சில ஆவணங்கள் அங்கு பணிபுரியும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்களால் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மாவட்ட அளவிலான அங்கீகாரக் குழுக்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedures – SOPs) உருவாக்கும். அரசு புதிய மாநில அளவிலான குழுக்களையும், மறுசீரமைக்கப்பட்ட 4 மாவட்ட அளவிலான குழுக்களையும் அமைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! அமைச்சர் மா.சு. உறுதி…