பிரிட்டன் நாட்டில் 2 வயது பெண் குழந்தைக்கு இந்தியர் ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான வடகிழக்கு பிரிட்டனில், அனாயா கண்டோலா என்ற 2 வயது பெண் குழந்தை, குறைமாத பிரசவத்தில் பிறந்தது. இதனால் அக்குழந்தை பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. அக்குழந்தையின் இரு சிறுநீரகங்களும் சமீபத்தில் அகற்றப்பட்ட நிலையில், புதிதாக சிறுநீரகம் பொறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் இது தொடர்பாக விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவ்விளம்பரங்களை கண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், அக்குழந்தைக்கு தனது சிறுநீரகம் ஒன்றை தானமாக தர முன்வந்தார். அப்பெண்ணிடம் மருத்துவ ரீதியிலான சோதனைகள் நடத்தப்பட்டு ஒப்பதல் பெறப்பட்ட பின்னர், அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு சிறுநீரகம், குழந்தைக்கு பொறுத்தப்பட்டது.
இந்திய வம்சாவளி பெண் ஒருவரின் சிறுநீரக தானத்திற்கு பின்னர், அக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும், விரைந்து அக்குழந்தை குணமடையும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.