பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு

Must read

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்கப்பட்டது.

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ் என்பவரின் மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதிக்கு கடந்த 27-ஆம் தேதி பெண்குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்தியதாக கூறி குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குழந்தையை கண்டுபிடிக்க ஆறு தனிபடைகள் அமைத்தனர்.

தனிப்படை போலீசார் மேற்கொண்ட தேடுதலில் குழந்தையை கேரளாவில் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article