புதுடெல்லி:
ந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர்.

முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் இண்டியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் களமிறங்குவதற்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் கிடம்பி ஸ்ரீகாந்த், அஷ்வினி, ரித்திகா தாக்கர், திரிஷா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் 7 பேரும் போட்டித் தொடரில் இருந்து விலகினர்.

இந்நிலையில், இத்தொடரில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.