சென்னை:
கடையை காலி செய்யும் விவகாரத்தில் பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெண்களை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக திருமயம் திமுக ஒன்றியச் செயலாளர் சர வணன் மீது கொலை முயற்சி உட்பட 8 பிரிவுகளில் சரவணன் மீது வழக்கு பதியப்பட்டு உஙளள நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைரவர் கோயில் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வரும் வாசுகி என்ற பெண்மணிக்கும், அவரது கடைக்கு எதிரே புதிதாக கடை வைத்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் அண்ணன் சிவராமனும், இடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்குவது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை காரணமாக ஆத்திரம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாசுகியை கடையை காலி செய்யுமாறு கூறி மிரட்ட, அவர் கடையை காலி செய்ய முடியாது என பிடிவாதம் பிடிக்க, வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
வாசுகிக்கு ஆதரவாக பேசிய அந்த பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்களையும் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெண்களையும் கடுமையாக அடித்து காயம் ஏற்படுத்தியதுடன் கடையில் உள்ள பொருட்களையும் தெருவில் வீசி எறிந்தனர். இது தொடர்பாக படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்தனர். பெண்களை தாக்கிய குற்றச்சாட்டு, கொலை முயற்சி உட்பட 8 பிரிவுகளில் சரவணன் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திருமயம் திமுக ஒன்றியச் செயலாளர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்குவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சரவணன் பெண்களை அடிக்கும் வீடியோ…