காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார். .
சமூகவலைத்தளங்களில் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வந்தார் குஷ்பு. அவரது ட்விட்கள் பல, சர்ச்சைகளை ஏற்படுத்தியதும் உண்டு.
இந்த நிலையில் அவர் டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருக்கும் குஷ்பு, புத்தகங்கள் படிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவு என்றும், இது தற்காலிகமாகனதே என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை நட்புடன் தன்னை ஆதரித்து அன்பு பாராட்டிய நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துளள அவர், சமூக வலைத்தளத்தை தேச ஒருமைப்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமென்றும் பழியுணர்வு இன்றி அன்புணர்வை பரவலாக்க ட்விட்டர் தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் குஷ்புவுக்கும் ட்விட்டரில் மோதல் நடந்துவந்தது. சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருந்தார் என்று குஷ்பூவிற்கு கோபம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் குஷ்பு விலகியிருக்கிறார். ஆகவே, குஷ்பு வெளியேறியதற்கு ஸ்ருதிதான் காரணம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை சுமார் பத்து லட்சம் பேர் பின்தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.