கலபுரகி

மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார்.

நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

அவர் தனது உரையில்

”காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் டெபாசிட்டாக உள்ளது. ஆனால் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டனர். காங்கிரசுக்கு வருமான வரித்துறை அதிக தொகையை அபராதமாக விதித்துள்ளது. 

எனவே தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை.  காங்கிரஸ் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது.. ஜனநாயகம், அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும். தேர்தலில் ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். 

பாஜகவிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. தங்கள் திருட்டுத்தனம் வெளியே வந்துவிடும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற அந்த பணம் குறித்த தகவல்களை வழங்க மறுக்கிறது. பாஜகவின் தவறுகள் வெளியே வரும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வரும் ஜூலை வரை கால அவகாசம் கோருகிறார்கள்” 

என்று கூறினார்.