யாஷ் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எப். படத்தின் 2 ம் பாகம் கே.ஜி.எப்.-2 ஏப்ரல் 14 ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது.

கன்னட மொழி படமான கே.ஜி.எப்.-2 தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் வெளியாகும் டப்பிங் படங்களுக்கு நிபந்தனைகள் உள்ளதால் இந்தப் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அச்சத்தில் உள்ளது.

இதனால், 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அகில இந்திய அளவில் ரிலீசாவதை கருத்தில் கொண்டு மாநில மொழி படங்களுக்கு நிகராக சிறப்பு காட்சிகள் மற்றும் டிக்கெட் விலையை நிர்ணயிக்க இந்த இரு மாநில அரசும் முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கிறார். ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரித்துள்ளார்.