டில்லி:

காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது காவிரி தொடர்புடைய 4 மாநிலங்கள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதுகுறித்து விசாரணை நடைபெற்றது.

அப்போது கேரளா சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான செலவு தொகையாக கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  15 சதவிகிதத்தை ஏற்க மாட்டோம் என கூறியது. தாங்கள் காவிரியில் இருந்து குறைந்த அளவு நீர் மட்டுமே பெறுவதால், தங்களால் 15 சதவிகித செலவினத்தை ஏற்க முடியாது என்று கூறி உள்ளது.

கடந்த 12ந்தேதி விசாரணையின்போது மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான செலவினத்தை காவிரி நீரை பங்கிடும் 4 மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும், தமிழகம், கர்நாடகம் தலா 40 சதவிகித செலவினத்தையும், கேரளா 15 சதவிகிதமும், புதுச்சேரி 5 சதவிகித செலவினத்தை ஏற்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்நிலையில், இன்றைய விசாணையின்போத, கேரளா 15% செலவை ஏற்க கேரள அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.