சபரிமலை

கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும்  இதனால் கடும்பாதிப்பு ஏற்படுவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி பம்பை ஹில்டாப் பகுதியில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கிமீ தொலைவுக்கு இந்த ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 4.5336 ஹெக்டேர் வன நிலம் தேவைப்படும். இதற்கு வனத்துறை முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே சபரிமலை வனப்பகுதியில் ரோப் கார் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வன நிலத்திற்கு பதிலாக கொல்லம் அருகே உள்ள பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒதுக்க கேரள அரசு தீர்மானித்து இதற்கு வனத்துறை சம்மதம் தெரிவித்தது.

அதன்படி அண்மைஇல்ல் வனத்துறையிடம் அரசு நிலம் ஒப்படைக்கப்பட்டதால் இந்த ரோப் கார் திட்டத்திற்கு கேரள வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சபரிமலை, கேரள வனவிலங்கு வாரியம், ரோப்கார் திட்டம், அனுமதி, Sabarimalai, Kerala wildlife board, Rope car approv