கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு

Must read

திருவனந்தபுரம்:

கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளன.

இது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், என். வாசு தெரிவிக்கையில், வரும், 17ம் தேதியன்று, மலையாள புத்தாண்டு பிறக்கிறது. அன்று, கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர்த்து, மற்ற கோவில்கள் அனைத்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மற்றும் முதியோர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். கடந்த ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால் வாரியத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

More articles

Latest article