புதுச்சேரி:

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் கலாச்சார கலை நிகிழ்ச்சிகள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுதி இல்லை. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.