திருவனந்தபுரம்:

ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை (போர்ட்டர்) பார்த்து வரும் ஒரு தொழிலாளி கேரளா அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் ரெயில்நிலையத்தில் ஸ்ரீநத் என்ற வாலிபர் கடந்தி 5 ஆண்டுகளாக போர்ட்டராக வேலை செய்து வருகிறார். இதர் சமீபத்தில் நடந்த கேரளா அரசு பணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் தனது மொபைல் போனுக்கு நன்றி தெரிவித்துள்ர்.

பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவரான ஸ்ரீநத் ரெயில்நிலைய வைஃபை இன்டர்நெட் இணைப்பு மூலம் தனது செல்போனை பயன்படுத்தி தேர்வுக்கு படித்துள்ளார். பயணிகள் சுமையை தலையில் தூக்கிச் செல்லும் போதும் ஹெட்போன் உதவியுடன் பாடங்களை கேட்டுக் கொண்டே சென்றுள்ளார். 2016ம் ஆண்டில் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தேர்வை அவர் 3 முறை எழுதியுள்ளார். ஆனால் இந்த முறை தான் ரெயில்நிலைய வைஃபை வசதியை பயன்படுத்தியுள்ளார். எனினும் பணியின் போது படிக்க முடியாத பாடங்களை இரவில் படித்துள்ளார். மேலும் இவர் ரெயில்வேயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62 ஆயிரம் காலிப் பணியிடங்களக்கு விண்ணப்பம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.