மதுரை; தமிழ்நாட்டில் விதிகளுக்கு புறம்பாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே  தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும், இதுகுறித்து தானாகவே வழக்கு பதிவு செய்து பிசாரணை நடத்தி வருஐகிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவக்கழிவுகள் கொட்டுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக கேரள எல்லையையொட்டிய மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்தவும் உத்தரவிட்டது.

ஆல், இந்த விஷயத்தில் நெல்லை ஆட்சியர் கவனம் செலுத்தவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது என கூறினார். கேரளாவில் இருந்து வந்து மருத்துவ கழிவுகளை கொட்டியது தொடர்பாக தென்காசியில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மருத்துவ கழிவுகளைய் கொட்டியது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், ‘ கோவை மாவட்டத்தில் 2018 முதல் 2022 வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நீதிபதிகள் தெரிவித்து வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

ஏற்கனவே இதுதொடர்பாக  தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பு உறுதி தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டி செல்லப்படும் விவகாரம்/செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில்,  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது என்றும், கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.