திருவனந்தபுரம்: உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஹத்ராஸ் கூட்டு பாலியல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் என்பவர், உ.பி. மாநிலத்தில், UAPA சட்டத்தின் கீழ் மாநில அரசால் கைது செய்யப்பட்டார் . அவருக்கு ஜாமின் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. சுமார் 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீனுக்குத் தேவையான ஜாமீன்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கப்பான், தன்மீது பொய் வழக்க போடப்பட்டுள்ளது என்றார்.