திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கொரோனா காலத்திலும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது. மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு பிறப்பித்துள்ள நடவடிக்கைகளை கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.