திருவனந்தபுரம்

கொரோனா பரவல் கேரளாவில் கட்டுக்குள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லீனா ஜார்ஜ் கூறி உள்ளார். 

க்டந்த் சில நாட்களாகக் கேரளாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 24 மணி நேரத்தில் அங்குப் புதிதாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரள மந்ல சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது.

“தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்துள்ளது. இதில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை.  கொரோன பரவல் கேரளாவில் கட்டுக்குள் உள்ளது.  

கேரளாவை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இங்கு அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் சிங்கப்பூர் விமான நிலையத்தில் 19 இந்தியப் பயணிகளுக்கு ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று உயர வாய்ப்புள்ளது.” 

என்று தெரிவித்துள்ளார்.