கேரளா: தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் செல்லாது என கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.  மதம் மாறியது தொடர்பாக போலி ஆவணத்தை காட்டி, தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதனால், அவரது பதவி பறிபோயுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற கேரள மாநில சட்டமன்ற தேர்தலின்போது, கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேவிகுளம் சட்டமன்ற தனித்தொகுதியில் போட்டியிட்டவர் தமிழரான ராஜா. இவரது பூர்விகம் நெல்லை மாவட்டம் ராஜாவின் தாத்தா நெல்லையை சேர்ந்தவர். அவர் 1951-ம் ஆண்டு கேரளாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது கேரளாவில்  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘தனித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ராஜா போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதனால் அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலின்போது  கம்யூனிஸ் கட்சி சார்பில் களமிறங்கிய ராஜா எம்எல்ஏ,  பட்டியலிடப்பட்ட சமூகத்தில் இருந்து மதம் மாறியவர் என்பது ஊர்ஜிதமானது. ஆனால், அவரை அதை மறைத்து, போலி ஆவணம் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.  அவரது தகிடுத்தத்தம் வெளியான நிலையில், அவரது வெற்றி செல்லாது என்று  நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

னித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது விதி. ஆனால், ராஜா போலியான ஆவணங்கள் மூலம் போட்டியிட்டு மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார் என்று கூறியதுடன், தேவிகுளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து  அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  அ.ராஜா பட்டியல் இன இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர் என்று கூறிய உயர் நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அரசிதழில் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராஜா எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்கும் போது தமிழில் பதவிப் பிரமாணம் செய்து, பந்தா காட்டியதுடன், அடுத்தடுத்து பல்வேறு பரபரப்புகபளை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ராஜா…