சென்னை: தமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344 ஆக  உள்ளது. தமிழ்நாட்டில்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த  எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  34,023 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  25,00,434 ஆக அதிகரித்துள்ளது.. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து  மீண்டவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் ஆன்டிபாடிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும்போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு ஆன்டிபாடிகள் உருவாகும். இது தொடர்பாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் வாரியாக மொத்தம், 70 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதில்,  11 மாநிலங்களில் குறைந்தது மூன்றில் இரு பங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி,  இந்தியாவில் கொரோனா நோய் தொற்று எதிர்ப்பாற்றல் பெற்றுள்ளோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது.  அதிகரித்துள்ளதாக, மூலம் தெரியவந்துள்ளது.

மேலும்,  இயற்கையாக உருவாகும் ஆன்டிபாடிகளை விட தடுப்பூசி மூலம் உருவாகும் ஆன்டிபாடிகளே அதிக காலம் நம் உடலில் இருப்பதாகவும்,  இயற்கை முறையில் நான்கு மாதங்கள் நீடித்தால், தடுப்பூசி முறையில் ஓர் ஆண்டு நீடிக்கிறது என்றும் ஆய்வு தரவுகள் கூறுகின்றன.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 79% மக்கள் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 69.2 சதவிகிதம் அளவில் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரிய வந்துள்ளத.

ராஜஸ்தானில் 76.2%, பீகாரில் 75.9%, குஜராத்தில் 75.3%, சத்தீஷ்கரில் 74.6%, உத்தரகாண்டில் 73.1%, உத்தரப் பிரதேசத்தில் 71%, ஆந்திராவில் 70.2%, கர்நாடகத்தில் 69.8% என்ற அளவிலும் நோய் எதிர்ப்பாற்றல் பதிவாகி உள்ளது.

நாட்டிலேயே மிகக் குறைவாக கேரள மாநிலத்தில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.