ஏழைகளுக்கு இலவச இணைய சேவை: கேரள அரசு அறிவிப்பு 

Must read

திருவனந்தபுரம்: 

20 லட்சம் ஏழைகளுக்கு இணையதள சேவையை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்திலும் தெலங்கானாவிலும் வீடுகளுக்கு இணையதள சேவையை இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் கேரள சட்டமன்றத்தில் முதலாண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் தாமஸ் ஐசக் இதனை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், கேரளாவில் வீடில்லாத ஏழைகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்களால் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு குறைந்த விலை வீடுகள் அடுத்தாண்டுக்குள் கட்டப்படும் என்று கூறினார்,

இதேபோல் அனைத்து பென்சன்தாரர்களுக்குத் தரப்படும் தொகை குறைந்தபட்சம் ரூ.100-லிருந்து அதிகபட்சம் ரூ.1100 வரை உயர்த்தப்பட்டுள்ளது..  இரண்டு ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் வருமானவரி கட்டத் தேவையில்லை என்றும் அவர்கள் குடும்பநல பென்சன் பெற தகுதியுடைவர்கள் என்றும் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளை உலகத்தரத்தில் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் தாமஸ் கூறினார். 25 பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ரூ.270 கோடியாக உயர்த்தப்படும் என்றார்.

மத்திய அரசின் உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலன் இல்லை, கேடுகள்தான் விளைந்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.

More articles

Latest article