பெங்களூரு,

ர்நாடகாவில் நடிகர் அஜீத் நடித்து டப் செய்யப்பட்டுள்ள சத்யதேவ் ஐபிஎஸ் படத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதன் காரணமாக அஜீத் படம் திரையிடப்படுவது தடுக்கப்பட்டது.

 

மற்ற மாநில மொழியில் தயாரிக்கப்பட்டு, கன்னட மொழியில் டப் செய்யபட்டு திரையிடப்படும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன கன்னட அமைப்புகள்.

தற்போது மீண்டும் இந்த பிரச்சினை தலைதூக்கி உள்ளன.

கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ தமிழ்படம் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’  என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த படம் திரையிடுவதை எதிர்த்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பு  கன்னட ரக்ஷச வேதிகே, கன்னட ஜனபட வேதிகா மற்றும் வாட்டள் நாகராஜ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் ஒருசில கன்னட நடிகர்களின் ரசிகர் மன்றமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தை கன்னட நடிகர் வெளிப்படையாகவே ஆதரித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.  படம் வெளியாவதற்க முந்தைய நாளான வியாழக்கிழமை அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில்,  கன்னட அமைப்பினரை, படம் வெளியிடப்படும் தியேட்டரின் ஸ்கிரினை தீ வைத்து எரிக்குமாறு தூண்டி விட்டிருந்தார்.

கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக சத்யதேவ ஐபிஎஸ் படம் திரையிடப்படுவது கர்நாடகா முழுவதும்  தடுத்து நிறுத்தப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவித்தும், நடிகர் ஜக்கேஷ் தனது டுவிட்டர் வலைதளத்தில்,  ‘போராடிய கன்னட பாய்ஸ்கள் குறித்து தான் பெருமைப் படுவதாகவும், இவர்கள்தான்  உண்மையான வீரர்கள், இவர்களால்தான் திரையரங்குகளில் படம் திரையிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது, அவர்களுக்கு நன்றி’  என்றும் கூறி கன்னட வெறியர்களை மேலும் உசுப்பேற்றி உள்ளார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் டப்பிங் படம் வெளியிடப்படுவதை எதிர்த்து பெங்களூரில் உள்ள மைசூர் வங்கி முன்பு கன்னட அமைப்பின் ஒரு பகுதியினிர் ஆர்ப்பாட்டம். அப்போது டப்பிங் படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் டப்பிங் படம் வெளியிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்த வேண்டும் என்றும், கற்களை வீசி தாக்கல் நடத்த வேண்டும் என்று கூறினர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் படம் வெளியிடப்பட்ட  அனைத்து இடங்களிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக நடிகர் அஜீத்-ன் டப்பிங் படமான சத்யதேவ் ஐபிஎஸ் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக கர்நாடக தமிழர்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.