Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

தங்க கடத்தல் வழக்கு: கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரரின்டம் என்ஐஏ மீண்டும் விசாரணை…

Sep 25, 2020

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்க கடத்தலில், முதல்வர் தனிச்செயலாளரான  ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனும் சிக்கியுள்ள நிலையில், அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான  என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஐக்கியஅரபு அமிரகம் பெயரில் வந்த பார்சல்கள் மூலம்  30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான  வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், தங்க கடத்தல் விவகாரம் என்ஐஏ அதிகாரிகள் பலரிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக  சிவசங்கரிடம் ஏற்கனவே 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது 3வது முறையாகவும் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக,  கேரள அமைச்சர்  ஜலீலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Post navigation

வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுகின்றன: பிரதமர் மோடி
மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer