டில்லி:
புட்காம் பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய விமானத்தை இயக்கி பலியான விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த், கேரள வெள்ள மீட்பில் சிறப்பாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.. அவரது இறுதி சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது.

கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத வெள்ளத்தின்போது, மீட்பு பணிகளை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டனர். மீட்பு பணியின்போது, இந்திய விமானப்படை வீரர்கள் மக்களை காப்பாற்றியதிலும், கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததிலும் பெரும் பங்காற்றினார்.
இந்த மீட்பு பணியின்போது, விமானப்படை விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த் சிறப்பாக பணியாற்றி பெரும் பாராட்டை பெற்றார். அவருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழும் வழங்கி கவுரவித்து இருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையிலிருந்து எம்ஐ-17 ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பட்காம் அருகே நடந்த இவ்விபத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இதில், ஒருவர் விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண்குழந்தை உண்டு. சித்தார்த்தின் மனைவியும் விமானப்படையின் விமானி ஆவார்.

சித்தார்த் வஷிஸ்த்தின் உடல் அவரது சண்டிகர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த இந்திய விமானப்படை விமானியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியில் உள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
சித்தார்த்தின் இறுதிச் சடங்கில் வி.பி.சிங் பட்னோர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் இறுதிமரியாதையை செலுத்தினர். இறுதிச் சடங்கின்போது விமானப்படை வீரர்கள் வானில் துப்பாக்கியால் சுட்டும் தங்கள் ஆயுதங்களை தலைகீழாக.நிறுத்தியும் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
உயிரிழந்த விமானி சித்தார்த் வாஷிஸ்த் இந்திய பாதுகாப்புத்துறையில் நான்காவது தலைமுறை யாக பணியாற்றி வந்தவர். இந்திய விமானப் படையில் 2010ல் பணியில் சேர்ந்த கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலையில்தான் ஹெலிகாப்டர் 154வது அலகுக்கு மாற்றப்பட்டார்.
இறந்த விமான வீரரின் தந்தையான ஜக்திஷ் கசால் கூறும்போது, என் மகன் விமானப்படையின் முக்கிய பைலட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்த அவரது மாமா வினீத் பரத்வாஜ் மூலம் இவர் விமானப்படையில் சேர்ந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சித்தார்த்துக்கு 2 வயது மகன் இருக்கிறார்.. அவரது பெயர் ஆங்கிட். ஒருமாதம் விடுமுறைக்காக அவர் குருகாம் வந்திருந்தார். ஆனால், தற்போது ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, அவர் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு தாய்நாட்டுக்காக கடமையாக சென்றார். அவருஙககு 3 சகோதரிகள் உள்ளனர். சித்தார்த் இளையவர். இவர் தவிர தங்களது குடும்பத்தில் பலர் ஆயுதப்படைகளில் பணியாற்றி உள்ளனர் என்றவர், தற்போது அவரது இறுதிச்சடங்கில் நாங்கள்கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நா தழுதழுக்க கூறினார்.