திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிரதான போட்டியாக இடது ஜனநாயக முன்னணி மற்றும் வலது ஜனநாயக முன்னணி இடையே நிகழ்கிறது. அதில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறி இருப்பதாவது: கேரளா சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடும். 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தலில் தொடர்ந்து 2 முறை போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.