டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதை கேட்டுக்கொண்டு தமிழக எம்.பி.க்கள் மவுனமாக இருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. நன்றிகெட்ட மாநிலம் கேரளா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவில், சிக்கிய கேரளாவுக்கு முதன்முதலில் கைகொடுத்தது தமிழ்நாடு, மேலும், கேரள முதல்வருக்கும் தமிழ்நாடு முதல்வரும் இடையே நல்ல முறையிலான நட்பு தொடர்கிறது. ஆனால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான . முல்லைப் பெரியாறு பெரியாறு பிரச்சினையில் மட்டும் கேரளத்தில் உள்ள ஆளும்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும், தமிழக மக்களக்கு எதிரான மனநிலையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை விவகாரத்தி, அந்த அணையை இடித்து விட்டு அதற்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் கேரள மாநலி காங்கிரஸ் எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.
கேரள அரசு நீண்ட காலமாக முல்லைபெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் வலியுறுத்தி வருகிறது. இதற்காக அணை பலவீனமாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது என அடிக்கடி சொல்லி வருகிறது. ஆனால், அணை பலமாக உள்ளதால், புதிய அணை தேவையில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக சொல்லி உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நிபுணர்கள் ஆய்விலும் அணை பலமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், லோக்சபாவில் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையால், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்பதே எங்களின் குறிக்கோள் . இவ்வாறு அவர் பேசினார்.
கேரள மாநிலகாங்கிரஸ் எம்.பி.யுன்பேச்சுக்கு திமுக உள்பட தமிக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் நலனுக்கு எதிராக கேரள காங்., எம்பி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் காங்., கூட்டணி வைத்துள்ளது. இப்படி கூட்டணி கட்சி எம்பியே தமிழகத்திற்கு எதிராக பேசும்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று விமர்சனம் எழுந்துள்ளது.