டுக்கி

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிரசாரத்தின் போது பாங்கு ஓசை கேட்டதால் பிரசாரத்தைச் சிறிது நேரம் நிறுத்தி உள்ளார்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது,  இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் அணிகள் மோதுகின்றன.    மூன்றாவதாக பாஜக அணியும் களத்தில் உள்ளது.   இங்கு தேர்தல் பிரசாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.,

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பினராயி விஜயன் மாநிலம் எங்கும் பிரசாரம் செய்து வருகிறார்.  இதில் ஒரு கட்டமாக நேற்று அவர் இடுக்கி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.  அவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோனியில் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது அங்கிருந்த பள்ளி வாசலில் பாங்கு ஓசை ஒலித்தது.

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுவதே பாங்கு எனக் கூறப்படுகிறது.   இதையொட்டி பினராயி விஜயன் தமது பிரசாரத்தினால் பாங்கு ஓசை மற்றவர்களுக்குக் கேட்காது என்பதால் தனது உரையைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்தார்.  பாங்கு ஓசை அழைப்பு முடிந்த பிறகு மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார்.