அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிர்விணையாற்றாமல் அனைவரும் அதை ஏற்கவேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

Must read

அயோத்தி வழக்கில் எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என கேரள மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாதுகாப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நிலம் தொடர்புடைய உத்திர பிரதேசத்தில் கடும் பாதுகாப்போடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “அயோத்தி வழக்கில் நாம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அமைதியான முறையிலேயே இருக்கவேண்டும் என்பதை கேரள மக்கள் உணர்ந்து, தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும். தீர்ப்பு காரணமாக மாநிலத்தில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினருக்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article