திருச்சூர்:
கேரளாவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாணவி ஒருவர் குதிரையில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருச்சூரை சேர்ந்த அந்த சிறுமி கம்பீரமாக குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுத சென்றார். இதனை சாலையில் சென்ற மக்கள் வியப்புடன் பார்த்ததுடன் சிறுமியை வெகுவாக பாராட்டினார்.
சிறுமி குதிரை மீது அமர்ந்து சவாரி செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மாணவி ஒருவர் தனது சீருடையுடன் வெள்ளை குதிரையில் அமர்ந்து அநாயசமாக சாலையில் செல்லும் காட்சி தெரிகிறது. குதிரையை வேகமாக மோட்டார் வாகனங்களுக்கு இணையாக அவர் செலுத்தியதும் பிரமிக்க வைக்கிறது.
பள்ளி மாணவி குதிரையில் செல்லும் வீடியோ….
Patrikai.com official YouTube Channel