திருவனந்தபுரம்:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நாடு முழுவதும் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் விறுவிறுப்பாக தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி, பாரதியஜனதா கட்சித்தலைவர் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
Kerala: BJP MP candidate from Thiruvananthapuram constituency, Kummanam Rajasekharan, queues up to cast his vote at a polling station in Thiruvananthapuram
கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா போன்றோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குமனம் ராஜசேகரனும் மக்களோடு மக்களாக வரிசையில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்