நெட்டிசன்:

நா சாத்தப்பன் அவர்களது முகநூல் பதிவு:
கேரளாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 140. போன முறை ( 2011 ) ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கூட்டணி 72 இடங்களிலும் எதிர் கட்சியான மார்க். கம்யூனிஸ்ட் கூட்டணி 68 இடங்களிலும் வென்றன. வித்தியாசம் வெறும் 4 இடங்கள்தான்.

இந்த 72 இடங்களில் காங்கிரஸ் வென்றது 39 இடங்கள் தான். காங்கிரஸ் கூட்டணியில் ஏழு கட்சிகள். கூட்டணி கட்சிகள் = 33 இடங்கள். கம்யூனிஸ்ட் கூட்டணியில் 10 கட்சிகள். என்றாலும் ஐந்தாண்டு வரை பிரச்னையின்றி உம்மன் சாண்டி ஆட்சி செய்தார்.
எம்.எல்.ஏ க்களை இழுக்கும் குதிரை பேர அரசியலை அம்மாநில அரசியல்வாதிகள் செய்யவில்லை. அப்படி செய்தால் மக்கள் அவர்களது அரசியல் வாழ்வுக்கு என்ட் கார்ட் போட்டு விடுவார்கள்.

கேரளா உயர்ந்த மாநிலம். ஸ்டாலின் தவிர்த்து பார்த்தால் அது போன்ற அரசியல் நம் ஊருக்கு வர இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும்.