65 வயது தாண்டிய முதியவர்களை கொரோனா எளிதில் தாக்கும் என்பதால், அவர்கள் நடமாட்டத்துக்கு அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை கடந்தவர்கள், கொரோனை தொற்றில் இருந்து சர்வசாதாரணமாக விடுபட்டு, காலனுக்கு ’‘டாட்டா’’ காட்டி குணம் அடையும் நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.
அண்மையில் கொல்லத்தில் 105 வயது முதியவரும், எர்ணாகுளத்தில் 103 வயது பெண்ணும் கொரோனா பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணம் அடைந்தனர்.
இப்போது 110 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
அவர் பெயர், வரியத் பாத்து. மலப்புரம் மாவட்டம் ரண்டதானை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
கொரோனா தொற்று காரணமாக அவர் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையின் பலனாக அவர் முழுமையான குணம் அடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, ‘’ அரசு டாக்டர்களின் விடா முயற்சியால், இது சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார்.
-பா.பாரதி.