டெல்லி: கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
லடாக் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். ஏற்கனவே  அவர் 2 வீடியோக்களை வெளியிட்டார்.
இந் நிலையில் கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை , விளைவு பேரழிவு ஏற்பட்டது.  தற்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்;  இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.