போட்டோஷாப் செய்த சுற்றுலாத்தளங்களுக்கு நேரில் செல்லப்போகும் கென்யப் பெண்மணி

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

KENYA 1
செவிலின் கேட் எனும் கென்யப் பெண்மணி, சுற்றுலாத்தளங்களுக்கு நேரில் செல்லமுடியாத தாகத்தை தீர்த்துக் கொள்ள,  ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் போல்  அடோப்-போட்டோஷாப் பின் உதவியால் நண்பர்கள் சுற்றுலாச் சென்று பதிவிட்ட புகைப்படங்களில் தன்னை இணைத்து படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.
KENYA 2 KENYA 3
KENYA 4
சிலர் அவர் சரியாக போட்டஷாப் செய்யாததை கிண்டல் செய்து, கேலியாகப் பலரால் பகிரப்பட்டது.
அதுமட்டுமின்றி, அவரின் புகைப்படத்தை இணைத்து மேலும் பல படங்களை  “#எங்கிருக்கின்றார் செவெலின் எனும் தலைப்பில் வெளியிட்டனர்.
KENYA DUPE 2 KENYA DUPE 3 KENYA DUPE 4
KENYA DUPE 1
இதன் மூலம் அவர் மேலும் பிரபலம் அடைந்தார்.
எனினும், அவர் மீது பரிதாபம் கொண்ட  சேம்  கிச்சுரு எனும்  வியாபாரி ஒருவர், இந்த கென்யப் பெண்ணின் கனவை நனவாக்க நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணை நேரில் வரவழைத்து நிதிஉதவியினை வழங்கினார்.
KENYA DUPE SAM
இவர் தற்பொழுது பாஸ்போர்ட் எடுத்து சீனாவிற்கு தன் முதல் பயணத்தை துவங்கவுள்ளார். அதற்காக அனைவருக்கும் தமது முகனூல் பக்க நிலைத்தகவலில் நன்றி கூறியுள்ளார்.
KENYA DUPE SAM 2
இந்தியாவின் அச்செ தின் இப்படித் தான் ஃஃபோட்டோஷாப்பில் செய்யப் பட்டுக்  மோடி பக்தர்களால் வழங்கப் பட்டு வருகின்றது. சேம் கிச்சுரு போன்று, இந்தியர்களின் கனவை நன்வாக்கப் போவது யார் ?
 

More articles

Latest article