டெல்லி: உலக சராசரி இணைய இணைப்பின் வேகம் , கடந்த ஆண்டை விட, டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 23% அதிகரித்து, 5.6 Mbps ஆக அதிகரித்துள்ளது.  ஒரு அறிக்கை புதன்கிழமை தெரிவித்தார்.
உலகளாவிய அடிப்படையில்,  70% நாடுகளில் / பகுதிகளில்  கடந்த மூன்று மாதங்களில், அதிகரிப்பு   ஜூலை-செப்டம்பர் 2015  காலத்தை விட  10% வரை தனிப்பட்ட IPv4 முகவரி எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளது.
43 நாடுகள் / பிரதேசங்களில்,  2015 ஜூலை-செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் IPv4 முகவரி எண்ணிக்கைகள் டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 10% மேல் அதிகரித்துல்ளது. அதேவேளையில், 13 நாடுகளில் இந்த எண்ணிக்கை 10% குறைந்து போய்உள்ளது. என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
digital india 2
பிரிட்டனில் அதிகப்பட்சமாக  சராசரி மொபைல் இணைப்பு வேகம் 26.8 Mbps வேகமும்,   14 Mbps வேகத்துடன் இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும் உள்ளது.  . ஈரான் 1.3 Mbps  வேகத்துடன் கடைசி இடத்திலும், அதனை விட வியட்நாம் 1.8 Mbps  வேகத்துடன் உள்ளது.
அகமை டெக்னாலஜிஸ் எனும்  உள்ளடக்க-விநியோக- பிணையம் சேவைகளின் முன்னனி நிறுவனம் வெளியிட்டுள்ள “  “நான்காம் காலாண்டு, 2015, இணைய நிலை அறிக்கை” யில் இந்த விவரம் வெலியிடப் பட்டுள்ளது.
“ஒரு உலகளாவிய கண்ணோட்டத்தில், சராசரி இணைய இணைப்பு வேகம்   காலாண்டு ஒப்பீட்டில் 8.6% யும் ஆண்டு ஒப்பீட்டில் 23%சதவிதமும்  உயர்ந்து  5.6 Mbps ஆக உயர்ந்துள்ளது.
digital india 1
உலக சராசரி உச்ச இணைப்பு வேகம் காலாண்டில் 1%, ஓராண்டில் 21% அதிகரித்துள்ளது,
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா 26.7 Mbps  வேகத்துடன் முதலிடத்திலும், இந்தியா 2.8 Mbps இணைப்பு வேகத்துடன் கடைசி இடத்திலும்.உள்ளது.

digital india internet speed.jpg
இணைய வேக உலகத் தரவரிசை விவரம்

அறிக்கையின் ஆசிரியர் “டேவிட் பெல்சன் கூறுகையில், “இந்த காலாண்டு (டிசம்பர் அக்டோபர் 2015) அறிக்கையில் இருந்து “சராசரி இணைப்பு வேகங்கள் அதிகரிப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் இனைபை மக்கள் தத்தெடுத்துள்ளதை அறியலாம். எனக் கூறினார்.
உச்சபட்ச இணைப்பு வேகத்தில்  ரட்டை இலக்க உயர்வைக் இந்தக் காலாண்டில் பதிவு  செய்துள்ள  நாடுகள்  இரண்டு. அவை, தென் கொரியா (95.3  Mbps) மற்றும் மக்காவோ (83.1 Mbps) . அவை   முறையே, 10% மற்றும் 13% பதிவுசெய்துள்ளன.
” பல உயர்ரக நிகழ்வுகள், குறிப்பாக, முக்கியமான ரியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்றவை  இந்த ஆண்டு  ஆன்லைனில் நேரிடையாக ஒளிபரப்பப் படும் வேளையில் நுகர்வோரின் எதிர்பார்ப்புக்கள் உயர்ந்துள்ளது. ஆன்லைனில் ஒளிபரப்பப் படும் காணொளியின் தரத்தை இன்னும் அதிகரிக்கமுடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த அறிக்கையில், இந்தக் காலாண்டில், முதல் 10 நாடுகளில், ஹாங்காங்  ஒன்றைத் தவிர மற்றவை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டது.  ஹாங்காங், ஒரு 9.8% வளர்ச்சியை கண்டது.  நோர்வே மற்றும் டென்மார்க் மிக பெரிய வருடாந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் இணைய வேகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில்  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இணைய வேகத் தரவரிசையில்  கடைசி சில இடங்களில் உள்ள இந்தியாவில், மக்களின் வரிப்பணத்தில் டிஜிட்டல் இந்தியா என்று செய்யப் படும் விலம்பரச் செலவை குறைத்து, இணைய வேகத்தை அதிகரிக்க முதலில் உள்கட்டுமான வசதியை அதிகப் படுத்த வேண்டும் என்பதே www.patrikai.com -ன்  பணிவான வேண்டுகோள்.