டில்லி
டில்லிக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார்.
டில்லி அரசுக்குத் தான் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க அதிகாரம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கும் அவசர சட்டத்திற்கு டில்லி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டில்லி அரசு வழக்கு தொடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.