மதுரை: தமிழர்களின் தொன்மையை விளக்கும் கீழடி  தொல்லியல் ஆய்வறிக்கை ஏற்க மறுத்த மத்தியஅரசுக்கு எதிரான மதுரையில், இன்று திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 மதுரையில் மத்தியஅரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில்  திருச்சி சிவா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய  அக்கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் திருச்சி சிவா,  நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு? என்று மத்திய பா.ஜ.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தொன்மையின் சிறப்பிடமாக விளங்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது. கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.