சென்னை:  பிரதமர் தமிழ்நாடு வருகை தந்துள்ள நிலையில், திமுக தலைமை கீழடி தவிர்க்க முடியாத வரலாறு என்ற பெயரில் கீழடி  ஆய்வுகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு உள்ளது.

கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வு அறிக்கையில் போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லையென மத்திய அமைச்சர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சர் இதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.  இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மாலை தமிழ்நாடு வருகை தந்துள்ளார். முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று கங்கைகொண்டான் சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முதல்வர் சார்பில் மனு அளிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைமை  “கீழடி” தவிர்க்க முடியாத வரலாறு.. என பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில்,   ‘இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி என்றும்,   கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் கீழடி ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.