நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்திவருகிறார் நடிகர் விஜய்.
இந்நிலையில் தெலுங்கில் ‘ஓபிரி’, ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லியிடம் சமீபத்தில் ஒரு கதை கேட்டுள்ளார். தனது அடுத்த படமாக தமிழ், தெலுங்கில் அதை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
இரு நாயகிகள் கொண்ட இப்படத்தில் ஒரு நாயகிக்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சு நடத்தி உள்ளனர். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்கிறார்.