செல்வராகவன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்,  கதாநாயகி..

Must read

செல்வராகவன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்,  கதாநாயகி..

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தரும் படைப்பாளிகளில் இயக்குநர் செல்வராகவனும் ஒருவர்.

அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்யும் ‘சாணி காயிதம்’’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க செல்வராகவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் , கதாநாயகியாக நடிக்க அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1980 களில் நிகழ்ந்த உன்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மர்ம முடிச்சுகளுடன் பின்னப்பட்டுள்ள இந்த படத்தின் கதையைக் கேட்டதும், எந்த வித தயக்கமும் இன்றி , இதில் நடிப்பதற்கு செல்வராகவன் ஒப்புக்கொண்டாராம்.

எனினும்  படத் தயாரிப்பாளர்கள் யோசித்துள்ளனர்.

செல்வராகவன், நடித்தால் தான் இந்த படம் நன்றாக இருக்கும் என அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கியுள்ளார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

-பா.பாரதி.

More articles

Latest article