சென்னை

டிகை கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி என்னும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் திரையரங்குகள் அடிக்கடி மூடப்படுவது மற்றும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.   இதனால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில்லை.  மாறாக ஓடிடி இணைய தளங்களில் திரைப்படங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் குட்லக் சகி என்னும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த திரைப்படம் நாகேஷ் குக்கனூர் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் உருவாகி உள்ளது.  இதில் கீர்த்தி சுரேஷுடன் ஆதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரும என அறிவிக்கப்பட்டு கொரோனா ஊரடங்கு காரணமாக டிசம்பர் 31க்கு தள்ளி வைக்கப்பட்டது.  அப்போதும் கொரோனா பரவல் அதிகரித்ததால் தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இப்போது இந்த படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.