நெட்டிசன்:
ஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்ற குரல்கள், சமூகவலைதளங்களில் ஒலிக்க  ஆரம்பித்திருக்கின்றன.

தேர்தல் கூட்டம் - தீபாவளி கூட்டம்
தேர்தல் கூட்டம் – தீபாவளி கூட்டம்

காரணம்… தீபாவளி!
உதாரணத்துக்கு, ஜாகீர் ஹூசைன் ஆர். சர்புதின் அவர்களின் முகநூல் பதிவு:
“தீபாவளிக்கு  மூன்று நாட்களுக்கு முன்பு  அக்டோபர் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. (தீபாவளி 29-10-2016)
இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்தித்கு உள்ளாவார்களே.
தீபாவளி நேரத்தில் காவல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும். இந்த காலகட்டத்தில் வழிப்பறி, திருட்டு, பிக்பாக்கெட் அதிகம்.  அதே போல தேர்தல் நேரம் என்றாலும் காவலர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும்.  இரண்டும் ஒரே நேரத்தில் என்றால், சட்டம் ஒழுங்கு பாதிக்காதா?
ஆபிஸர்ஸ்… கொஞ்சம் தள்ளி வைக்கலாமே…. அரசு பரிசீலிக்குமா?” என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல பலரும் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.