மதுரை: கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வின் அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் உள்ளது.

கீழடியில், 2013 முதல் 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற  இரண்டாம் கட்ட அகழாய்வின்போது  மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள் கள் கிடைத்தன. இந்த ஆய்வு அறிக்கையை இன்னும் மத்தியஅரசு வெளியிடாமல் உள்ளது.

இதுதொடர்பாக   மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,  கீழடி 2வது கட்ட அகழ்வாய்வு குறித்து, தொல்லியல் ஆய்வாளர்  அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த அறிக்கையை 9 மாதங்களுக்குள் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஆகழ்வாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியபோது,  இரண்டாம் கட்ட அகழாய்வில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.  39 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றும், இந்த ஆய்வின்போது, புதையுண்டுள்ள சங்க காலக் கட்டிடங்கள் பல கிடைத்துள்ளன. சங்க காலத்தில் ஒரு நகரம் இருந்ததற்கான அனைத்து தடயங்களும் உள்ளன என கூறியிருந்தார். மேலும் அங்கு காணப்பட்ட கட்டிங்கள் மற்றும்  நீண்ட நெடிய சுவர்கள், செங்கலால் ஆன வாய்க்கால், தொடர்ச் சியான சுவர்கள் போன்ற நகரத்திற்கான அனைத்து அடையா ளங்களும் உள்ளன. சுமார் 4 அடி ஆழத்திலேயே ஏராளமான கட்டிடங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் இதுபோன்று அதிகமான சங்ககாலக் கட்டிடங்கள் கிடைப்பது இங்குதான் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனவரியில் தொடங்கி இதுவரை 1,600 தொல்பொருட்கள் கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது. தமிழ் பிராமி மண்பாண்ட ஓடு, அரிய வகை கல் மணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பா லான அம்பு முனைகள் கிடைத் துள்ளன. இன்னும் ஆழமாக தோண்டும்போது அரிய வகை ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.