சென்னை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்பட அவருக்கு  சொந்தமான 28 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ரூ.90 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, காவல்துறையின் முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,  திமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைக் கொண்டு சோதனை நடத்துகிறது.  பழிவாங்கும் நடவடிக்கையாக  முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் போது ரெய்டு நடத்துவது ஏன்? உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அதிமுகவினரை பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது” ஆனால், இந்த ரெய்டுக்கெலாம் அதிமுக பயப்படாது. எதற்கும் அஞ்சாத இயக்கம் அதிமுக இயக்கம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்